fbpx

ஜனவரி 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு தடை..!! ஏன் தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் முதன்மையாக இருப்பது யுபிஐ பரிவர்த்தனை தான். அனைத்து வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் யுபிஐ சேவையை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்றவை பிரபலமாக இருக்கின்றன. இந்நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் யுபிஐ ஐடி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படாது என தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஒரு வருடக்காலமாக யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நபர்களின் ஐடி-க்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யுபிஐ ஐடி-க்களும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் பரிவர்த்தனைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யுபிஐ ஐடி இருந்தும் எந்த சேவையும் மேற்கொள்ளாதவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் உங்களில் ஐடி நீக்கப்படுவதை தவிர்க்கலாம்.

Chella

Next Post

JN.1 தீவிரத்தை உணருங்கள்!… கட்டுப்பாடுகளை கட்டாயமாக்கும் மாநில அரசுகள்!… எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன கட்டுப்பாடுகள்?

Sat Dec 23 , 2023
கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 2020ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது போல் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கேரளா 3, கர்நாடகா 2, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அதாவது ஏற்கனவே சீரியசான உடல்நலப் பாதிப்புகள் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது உயிரிழப்புகளில் கொண்டு போய் […]

You May Like