Toll price: பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்பு பால், டீசல் விலை, மின்சார கட்டணம் உயர்ந்த நிலையில், தற்போது சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரித்துள்ளது, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பெங்களூர் விமான நிலைய சாலையில், சுங்கக் கட்டணங்கள் உயர்ந்ததை தொடர்ந்து, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று வருவதற்கான செலவு மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள விமான நிலைய சாலையில், சுங்கச் சாவடி கட்டணமானது அதிகரித்துள்ளது. கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் (இலகுரக மோட்டார் வாகனங்கள்) ஒரு பயணத்திற்கு ரூ.120 வசூலிக்கப்படும், இது ஏற்கனவே உள்ள ரூ.115 இல் இருந்து ரூ.120 ஆகவும், 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணத்திற்கு ரூ.180 ஆகவும் இருக்கும் எனவும் இதற்கு முன்பு திரும்பும் பயணத்திற்கான தற்போதைய கட்டணம் ரூ.170 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சடஹள்ளி (KIA சாலை, NH 7), ஹுலிகுண்டே மற்றும் நல்லுரு தேவனஹள்ளி சுங்கச்சாவடிகளுக்கான சுங்கக் கட்டணங்களை அதிகரித்துள்ளது. புதிய சுங்கக் கட்டணங்களானது, சாட்டலைட் டவுன் ரிங் ரோட்டின் இரண்டு செயல்பாட்டுப் பகுதிகளிலும் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
சதஹள்ளி டோல் பிளாசா (22.12 கி.மீ): கார்கள், ஜீப்புகள், வேன்கள் மற்றும் இலகுரக வாகனங்களின் ஒருமுறை பயணத்திற்கு ரூ.120 (ரூ.115 முன்பு ), திரும்பும் பயணத்திற்கு ரூ.180 (ரூ.170 முன்பு ), மாதாந்திர பாஸ் (50 பயணங்கள்): ரூ.3,970 (ரூ.3,835 முன்பு ).
இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மினிபஸ்கள் ஒருமுறை பயணம்: ரூ.185 (ரூ.175 முன்பு ), திரும்பும் பயணம்: ரூ.275 (ரூ.265 முன்பு ), மாதாந்திர பாஸ்: ரூ.6,100 (ரூ.5,890 முன்பு ).
டிரக்குகள் மற்றும் பேருந்துகள்: ஒருமுறை பயணம்: ரூ.370 (ரூ.355 முன்பு ), திரும்பும் பயணம்: ரூ.550 (ரூ.535 முன்பு ), மாதாந்திர பாஸ்: ரூ.12,265 (ரூ.12,265) ரூ.11,845 முன்பு ), ஹுலிகுண்டே டோல் பிளாசா ( டாப்ஸ்பெட்-தொட்டபல்லாபூர் பாதை ).
இலகுரக மோட்டார் வாகனங்கள்: ஒருமுறை பயணம்: ரூ.110 (ரூ.105 முன்பு), திரும்பும் பயணம்: ரூ.165 (ரூ.155 முன்பு ),
மாதாந்திர பாஸ்: ரூ.3,615 (ரூ.3,490 முன்பு).
நல்லூரு தேவனஹள்ளி டோல் பிளாசா (34.15-கி.மீ. தொட்டபல்லாபூர் பைபாஸ்-ஹோஸ்கோட் பாதை)
கார்கள் மற்றும் இலகுரக வாகனங்களின் ஒருமுறை பயணம்: ரூ.85 (ரூ.70 முன்பு), திரும்பும் பயணம்: ரூ.125 (ரூ.105 முன்பு), மாதாந்திர பாஸ்: ரூ.3,490 மாறாமல் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பெங்களூர் விமான நிலைய சாலையில் உள்ள டோல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது, கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: பறிபோகும் தமிழக உரிமை…! மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம்…!