fbpx

பெங்களூர் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி, வீட்டு வாடகை 80000 ரூபாய்..!

இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகாகவும், பிஸ்னஸ் துவங்குவதற்காகவும் இந்தியாவின் முக்கிய தொழில்நகரமான பெங்களூர்-க்கு வந்துக்கொண்டு இருக்கின்றனர். பல பெங்களூரில் குடும்பத்துடன் வாழ திட்டமிட்டு வருகின்றனர், வொர்க் ப்ரம் ஹோம் முடிந்த பின்பு பெங்களூர் நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்துடன் பெங்களூர் வந்துள்ளனர். இப்படி பல காரணத்திற்காக பெங்களூர் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் பெங்களூரில் வீட்டு வாடகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது, மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 2 மாதத்தில் பெங்களூரில் மீண்டும் ஒரு ரவுண்ட் வாடகை உயர்ந்துள்ளது. அப்பார்ட்மென்ட் அல்லாத ஒரு தனி கட்டிடத்தில் 2BHK வீட்டின் வாடகை தற்போது பெங்களூரில் சராசரியாக 35,000 முதல் 38,000 ரூபாயில் கிடைக்கிறது. இது முன்பு 25,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே 2BHK வீடுகள் கேட்டெட் கம்யூனிட்டியில் இருந்தால் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக தொகைக்கு வாடகையாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இது பெங்களூர் புறநகர் பகுதியில் 20000 முதல் 25000 ரூபாய்க்கு கிடைக்கிறது, முன்பு இது 12000 முதல் 15000 ரூபாயாக இருந்தது. மேலும் பெங்களூரின் முக்கிய மற்றும் அதிகப்படியான ஐடி சேவை நிறுவனங்கள் இருக்கும் சர்ஜாபுரா, இந்திராநகர், HSR லேஅவுட் போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 3BHK பிளாட்களின் மாத வாடகை 80,000 ரூபாய்க்கு மேல். இதனால் புதிதாக வாடகை வீடுகளை தேடுவோர் பேகூர் அல்லது ஓசூர் சாலை போன்ற இடங்களைப் தேர்வு செய்கின்றனர். பல அப்பார்ட்மென்ட்களில் பழைய குடியிருப்பாளர்களுக்கம் வாடகை இன்றைய சந்தை நிலவரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வீட்டை காலி செய்யும் மனநிலையில் இருப்பது மட்டும் அல்லாமல் சொந்தமாக வீட்டை வாங்கும் முயற்சியில் உள்ளனர். பேகூர் அல்லது ஓசூர் சாலை போன்ற தமிழர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அப்பார்ட்மென்ட் வாடகை பிற பகுதிகளை ஒப்பிடுகையில் 15,000 – 20,000 ரூபாய் வரையில் உள்ளது.

Maha

Next Post

பெட்ரோல், டீசல் பல மாதங்களாக ஒரே விலை; விலையை குறைக்குமா மத்திய அரசு..??

Fri Jul 28 , 2023
மத்திய அரசும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. இதோடு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகின்றனர். அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது பங்க்-களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகிறது. இதன் மூலம் […]

You May Like