fbpx

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் ரயில்களின் முனையங்கள் மாற்றம் …. பயணிகள் அதிர்ச்சி …

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்க செல்லும் பத்து ரயில்களின் முனையங்களை மாற்றியுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் முனையத்தில் இருந்து செல்கின்றன. இந்நிலையில் நாகர்கோவில் விரைவு ரயில் உள்பட 10 ரயில்கள் புறப்படும் முனையம் மாற்றப்பட்டுள்ளது. இனி அந்த ரயில்கள் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்படாமல் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் எம்.விசுவேஸ்வரய்யா முனையத்தில் இருந்து புறப்பட்ட வந்து சேரும்.

இது குறித்த செய்தி குறிப்பில் , ’’ பெங்களூரு – நாகர்கோவில் ரயில் (17235), மாலை 5.15 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் – பெங்களூரு ரயில் வருகின்ற 3-ம் தேதி முதல் பைப்பனஹள்ளி விசுவேஸ்வரய்யா ரயில் முனையம் வரை இயக்கப்பட உள்ளது.

இதே போல திருப்பதி – பெங்களூரு  இடையே இயக்கப்படும் காக்கிநாடா (17209 /10) 1ம் தேதி முதல் எம்.விசுவேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. பெங்களூரு – திருப்பதி விரைவு ரயில் (22618) புறப்படும் முனையம் மாற்றப்பட்டுள்ளது. புறப்படும் நேரத்திலும் மாற்றம் உள்ளது.

பெங்களூருவில் சிட்டி அருகே உள்ள ராஜாஜிநகர் , ஸ்ரீராமபுரம் , கே.பி. அக்ரஹாரா உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் பெங்களூரு- நாகர்கோவில் விரைவு ரயிலை அதிகம் பயன்படுத்துகி்றார்கள். இந்நிலையில் இந்த மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து மற்றும் மெட்ரோ வழியாக சென்றால் கிட்டத்தட ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து ரயில் நிலையம் சென்று ரயிலை பிடிப்பது பயணிகளுக்கு அசவுகரியமாக இருக்கும். என்பது பெரும்பாலான பயணிகளின் கருத்து.

Next Post

வெப்சீரிசில் நடிக்க தயாராகின்றார் நடிகை இலியானா……

Tue Sep 13 , 2022
தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா பின்னர் தமிழ்ப்படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. இந்நிலையில் வெப்சீரிசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தியில் அதிக படங்கள் நடித்து முன்னணிஇடத்தில் இருக்கன்றார். சில நாட்கள் பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். இந்தி படங்களில் ஏற்கனவே ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.அடுத்தடுத்து […]

You May Like