fbpx

வங்கிகள் அக்டோபரில் 21 நாள் விடுமுறை …. வங்கி வேலைகள் இருந்தால் முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்..

அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கிகள் 21 நாட்கள் விடுமுறை இருப்பதால் முன்பே  திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது…. அதே நேரத்தில் 3 நாட்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் விழாக்காலம் தொடங்கிவதால் விடுமுறை நாட்கள் , சனி , ஞாயிறு , பொது விடுமுறை என அனைத்தையும் சேர்த்து 21 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது  குறித்த தகவலை ரிசர்வ் வங்கிவெளியிட்டுள்ளது. அதே போல என்எஸ்இ பங்குச்சந்தை வார இறுதி நாட்களைத் தவிர விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது.

சில நாட்கள் வங்கி விடுமுறை சார்ந்ததாகவும் சில நாட்கள் தேசிய அளவிலான விடுமுறை சார்ந்ததாகவும் உள்ளது. தேசிய விடுமுறை நாளில் நாடு முழுக்க உள்ள வங்கிகள் செயல்படாது.

அக்டோபர் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் ..

  • 1.10.2022 – வங்கிக் கணக்குகளின் அரையாண்டு மூடல்
  •  
  • 2.10.2022 – காந்தி ஜெயந்தி (அனைத்து மாநிலங்களும்)
  •  
  • 3 .10.2022  – துர்கா பூஜை, மஹா அஷ்டமி ( சிக்கிம், திரிபுரா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் , மேகாலயா , கேளைா , மணிப்பூர்)
  •  
  • 4.10.2022 – துர்கா பூஜை , மஹாநவமி – ( கர்நாடகா, ஒடிசா, சிக்கிம் , கேரளா , வங்கம் , உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார் , ஜார்கண்ட், மேகாலயா )
  •  
  • 5.10.2022 – துர்கா பூஜை , தசரா (மணிப்பூர் தவிர )
  •  
  • 6.10.2022  – துர்கா பூஜை, தாசைன் – சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் வங்கிகள் விடுமுறை
  •  
  • 7. 10.2022   – சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் வங்கிகள் விடுமுறை

அக்டோபர் 8 மற்றும் 22ம் தேதிகளில் இரண்டாவது மற்றும் 4 வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை . அக்டோபர் 2,9,16,23, 30 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை

அக்டோபர் 22 முதல் அக்டோபர் 24 வரை (சிக்கிம் , தெலுங்கானா, மணிப்பூர் தவிர ) தீபாவளி விடுமுறை ..

பங்குச்சந்தை விடுமுறை பட்டியல்

அக்டோபர் 5 – தசரா பண்டிகை (பிஎஸ்இ, என்எஸ்இ)

அக்டோபர் 24  – தீபாவளி , லட்சுமி பூஜை

அக்டோபர் 26 – தீபாவளி , பலிபிரதிபடா

எம்.சி.எக்ஸ் வர்த்தகம் அக்டோபர் 5,24,26 ஆகிய நாட்களில் முதல் அரை நாள் (9 முதல் 5 மணி வரை ) விடுமுறை .

விவசாய கம்மோடிட்டி வர்த்தகம் என்.சி.டி.எக்ஸ். அக்டோபர் 5 மற்றும் 26 முழு வேளையும் விடுமுறை ..

Next Post

ஜாலி... 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 12 வரை விடுமுறை நீட்டிப்பு...! அரசு புதிய அறிவிப்பு...!

Wed Sep 28 , 2022
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 9 வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில்;காலாண்டு தேர்வு முடிவு பெற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து வட்டாரக்‌ கல்‌வி, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, காலாண்டுத்‌ தேர்‌வு கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டு தேர்வு முடிந்தவுடன்‌ 01.10.2022 […]

You May Like