fbpx

வங்கி வாடிக்கையாளர்களே பிளான் பண்ணிக்கோங்க..!! பிப்ரவரியில் 11 நாட்கள் விடுமுறை..!!

2024 பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள வங்கிகள் சில நாட்கள் மூடப்பட்டிருக்கும். வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரியில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி 11 நாட்கள் விடுமுறை நாட்களில் அனைத்து ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படாது. விடுமுறை உள்ள மாநிலங்களில் மட்டும் வங்கிகள் மூடப்படும்.

பிப்ரவரி மாத வங்கி விடுமுறை பட்டியல்…

பிப்ரவரி 4 : ஞாயிறு

பிப்ரவரி 10 : இரண்டாவது சனிக்கிழமை

பிப்ரவரி 11 : ஞாயிறு

பிப்ரவரி 14 : புதன்கிழமை, பசந்த பஞ்சமி/சரஸ்வதி பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

பிப்ரவரி 15 : வியாழன், லுய்-நகை-நி (இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

பிப்ரவரி 18 : ஞாயிறு

பிப்ரவரி 19 : திங்கட்கிழமை, சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடல்)

பிப்ரவரி 20 : செவ்வாய், மாநில தினம் (ஐஸ்வால் மற்றும் இட்டாநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

பிப்ரவரி 24 : நான்காவது சனிக்கிழமை

பிப்ரவரி 25 : ஞாயிறு

பிப்ரவரி 26 : திங்கள், நியோகம் (இட்டாநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! விவசாயிகளே இனி உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கொட்டப்போகுது..!!

Tue Jan 30 , 2024
பிஎம் கிசான் திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் […]

You May Like