நாளை முதல் 2022 வருடத்திற்கான டிசம்பர் மாதம் தொடங்குகிறது, இந்த மாதத்திற்கான வங்கி சார்ந்த வேலைகளை சரியாக திட்டமிட டிசம்பர் மாத வங்கிகளின் விடுமுறை நாட்கள் எப்போது என்று இந்த பதிவில் காண்போம். இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்களையும் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 4 ஞாயிற்றுக்கிழமை உட்பட 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி…
செயின்ட் பிரான்சிஸின் விருந்து – டிசம்பர் 3
கோபா-டோகன் நெங்மின்ஜா சங்மா – டிசம்பர் 12
மேகலயகோ லிபரேஷன் தினம் – டிசம்பர் 19
கிறித்துமஸ் திருவிழா – டிசம்பர் 24
அகில இந்திய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்/லோசூங்/நாம்சூங் – டிசம்பர் 26
ஞாயிறு – டிசம்பர் 4
இரண்டாவது சனி – டிசம்பர் 10
ஞாயிறு – டிசம்பர் 11
ஞாயிறு – டிசம்பர் 18
நான்காவது சனி – டிசம்பர் 24
ஞாயிறு – டிசம்பர் 25
மேகாலயா குரு கோபிந்த் சிங் ஜி பிறந்தநாள் – டிசம்பர் 29
புத்தாண்டு மாலை – டிசம்பர் 31.