Holiday: மகாசிவராத்திரியை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படுகின்றன.
விடுமுறை நாட்களை மாநில அரசுகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானிக்கின்றன. மார்ச் 2024 இல், மாநிலங்கள் முழுவதும் உள்ள வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் காட்டுகிறது. இந்த மாதத்தில் வங்கியின் பாதிநாட்கள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வர்த்தகம், தொழில், தனித் தேவைகளுக்கு ஏற்றபடி பண இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். காசோலை வழங்குவோர் அதற்கேற்ப திட்டமிட்டு வழங்க வேண்டும்.
மார்ச் 2024ல் சாப்சார் குட், /சிவராத்திரி, பீகார் திவாஸ், ஹோலி (இரண்டாம் நாள்) – துலேட்டி/டோல் ஜாத்ரா/துலாண்டி, யாசாங் 2வது நாள்/ஹோலி, ஹோலி, புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்படும். அந்தவகையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று வங்கிகள் மூடப்படும், அதைத் தொடர்ந்து இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு என்பதால் விடுமுறை ஆகும்.
எந்த மாநில வங்கிகள் மூன்று நாட்கள் மூடப்படும்: குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, சண்டீகர், உத்தராகண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஜம்மு – ஸ்ரீநகர், கேரளா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் வங்கிகள் 3 நாட்கள் மூடப்படுகின்றன.
Readmore: நாடாளுமன்றத் தேர்தலில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டி..! எந்த தொகுதி..?