Bank Holidays in April 2024: ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி தயாரித்து வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது விடுமுறைகள், இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். ரம்ஜான், ராமநவமி, பைசாகி போன்ற தேசிய விடுமுறை நாட்களில் நாடுமுழுவதும் வங்கிகள் செயல்படாது. சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், சிரமங்களை தவிர்க்கலாம். அதன்படி ஏப்ரல் மதத்தின் விடுமுறை நாட்களின் பட்டியில் பின் வருகின்றன.
ஏப்ரல் 1, 2024: வங்கிகளின் வருடாந்திர கணக்குகளை மூடுவதற்கு மார்ச் 31 அன்று ஈடுசெய்ய வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மிசோரம், சண்டிகர், சிக்கிம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் வங்கிகள் திறந்திருக்கும். இவைகளைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஏப்ரல் 5, 2024: பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்/ஜுமாத்-உல்-விடாவை முன்னிட்டு தெலுங்கானா மற்றும் ஜம்முவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
ஏப்ரல் 9, 2024: குடி பத்வா/உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு தினம்/சாஜிபு நோங்மபான்பா (செய்ராபா)/1வது நவராத்ராவை முன்னிட்டு மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மணிப்பூர், கோவா, ஜம்மு ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 10, 2024: கேரளாவில் இத்-உல்-பித்ரை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஏப்ரல் 11, 2024: சண்டிகர், சிக்கிம், கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் தவிர அனைத்து மாநிலங்களிலும் ரம்ஜான்-ஐத் (இத்-உல்-பித்ர்) (1வது ஷவால்) விடுமுறையாக இருக்கும்.
ஏப்ரல் 13, 2024 (இரண்டாவது சனிக்கிழமை): திரிபுரா, அசாம், மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் போஹாக் பிஹு/செய்ரோபா/பைசாகி/பிஜு பண்டிகைக்காக வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 15, 2024: அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
ஏப்ரல் 16, 2024: ராம நவமிக்கு குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 20, 2024: திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.