fbpx

கவனம்..! இந்த தேதிகளில் எல்லாம் வங்கி இயங்காது…! விடுமுறை தினமாக இருக்கும் என அறிவிப்பு…!

டிசம்பரில் வங்கிச் செயல்பாடுகளைக் கொண்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் விவரங்களை பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, 2022 டிசம்பரில் பல்வேறு மாநிலங்கள் மொத்தம் ஒன்பது நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஒன்பது விடுமுறை நாட்களைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில், பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

விடுமுறை பட்டியல்

டிசம்பர் 3 – சனிக்கிழமை – புனித பிரான்சிஸ் சேவியரின் விழா முன்னிட்டு கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 5 அன்று குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் 2022- தேர்தல் காரணமாக குஜராத்தில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 12 அன்று பா-டோகன் நெங்மிஞ்சா சங்மாவை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 19 அன்று கோவா விடுதலை நாள் முன்னிட்டு கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 26 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்,லோசூங்,நம்சூங் முன்னிட்டு மிசோரம், சிக்கிம் மற்றும் மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 29 அன்று குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் முன்னிட்டு சண்டிகரில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 30 அன்று யு கியாங் நங்பா முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 31 அன்று நியூ இயர்ஸ் ஈவ் முன்னிட்டு மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை.

Vignesh

Next Post

சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்..!! இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி..!!

Thu Dec 1 , 2022
வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான கியாஸ் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டல், டீக்கடை […]

You May Like