fbpx

வங்கி வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! உடனே முந்துங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர்: உதவி மேலாளர்

காலிப்பணியிடம்: பொதுப் பிரிவினருக்கு 244 இடங்களும், பட்டியல் கண்ட பிரிவினருக்கு 190 இடங்களும், பழங்குடியினர் இனத்தவருக்கு 17 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 89 இடங்களும், பொருளதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 60 இடங்களும், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 32 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 600 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்: வங்கி நிதி மேலாண்மை மற்றும் காப்பீடுத் துறைகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 21- 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை: இணைய வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வு, ஆட் சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை ஆகிய படிகளை கொண்டுள்ளது. எவ்வாறாயினும், எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.1,000 ஆகும். பட்டியல் கண்ட பிரிவினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.200 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Recruitment of Assistant Manager (Grade “A”) – 2023-24,Apply Online என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.28 (இன்று)

Chella

Next Post

பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி..!! அப்பல்லோவில் தீவிர சிகிச்சை..!!

Tue Feb 28 , 2023
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி. இவர் இந்தியா முழுக்க ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்று வந்துள்ளார். தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக பிரச்சனையால் […]

You May Like