கடந்த ஐந்து ஆண்டுகளில், Minimum Balance இல்லாத அக்கவுண்ட்டில் இருந்து அபராதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மூலம் கிட்டத்தட்ட 35,000 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து வங்கிகள் வசூலித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
(Minimum Balance)குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது, கூடுதல் ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளை மேற்கொண்டது மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் வழங்கப்பட்டது ஆகியவற்றுக்காக, இந்த 35,000 கோடி ரூபாயை கடந்த ஐந்து ஆண்டில் வங்கிகள் வசூல் செய்துள்ளன. இது குறித்து, ரிசர்வ் வங்கி தன் சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: வங்கிகள் அனைத்து வகையான பரிவர்த்தனைகள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும். மேலும், கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும்போது, அவை நியாயமான வகைக்காக பெறுவதை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள், தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதபோது, நியாயமான அபராதக் கட்டணங்களை நிர்ணயித்து வசூலிக்க, கடந்த 2015 ஏப்ரல் முதல், வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.