fbpx

ஆபாச செயலிகளால் ஆப்பு..!! பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் செல்போனை செக் பண்ணுங்க..!!

ஆபாச செயலிகள் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை இழக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை எச்சரிக்கையில், ”க்ளோக்கோண்டோ எனும் செயலி ஒன்று உள்ளது. இதில் பெண்கள் மீது தவறான எண்ணம் கொண்ட நபர்களை தேடி பிடித்து அவர்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் பெண்களின் ஆபாச படங்களை அனுப்புகின்றனர். பின்னர், பெண்களை வைத்து அந்த நபர்களை ஏமாற்றி குறிப்பிட்ட ஒரு நம்பரை அனுப்புகின்றனர். இதில் பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறுகின்றனர்.

இதனை உண்மை என நம்பி அந்த எண்ணுக்கு சிலர் பணத்தை அனுப்புகின்றனர். பணம் அனுப்பியவுடன் அந்த நம்பர் செயலில் இருக்காது பேசிய நபர்களையும் தொடர்பு கொள்ள முடியாது. இது முற்றிலும் ஏமாற்றும் ஒரு செயலி ஆகும். எனவே, பொதுமக்கள் யாரும் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

குறிப்பாக, சிறுவர்களை இந்த செயலி மூலம் குறிவைத்து ஏமாற்ற நினைக்கின்றனர். எனவே, சிறுவர்களை அவரது பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த செயலியின் மூலம் யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் புகார் தெரிவிப்பதன் மூலம் ரகசியமாக சைபர் கிரைம் மூலம் விசாரணை செய்து மர்ம நபர்களை கைது செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழக போக்குவரத்து துறையில், காத்திருக்கும் வேலை வாய்ப்பு.....! உடனே இதை செய்யுங்கள்…..!

Sun Sep 17 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு செய்திகள் பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக போக்குவரத்து துறையில் காலியாக இருக்கின்ற driver, contractor போன்ற காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக இந்த […]

You May Like