fbpx

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்..! புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..! – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் குச்சிகள், கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘பாலீஸ்டைரீன்’ என்ற தெர்மாகோல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தட்டுகள், குவளைகள், முள் கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சுகுழல்கள், தட்டுகள் ஆகியவற்றிற்கும் தடை உள்ளது. மெல்லிய பிளாஸ்டிக்கால் போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இனிப்பு பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக், ‘பிவிசி’ பேனர்கள், கிளரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்..! புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..! - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

தமிழக அரசு ஏற்கனவே, ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதித்தது. மத்திய – மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தப்பட்ட விதிகள் – 2021ன்படி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் குறித்த விவரங்களை, https://tnpcb.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர் குறித்து, 1800 425 6750 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கட்டுப்பாட்டு அறையில், வரும் 31ஆம் தேதி முதல், காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அலுவலக நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’வரி பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்’..! பரபரப்பு அறிவிப்பு

Sun Jul 10 , 2022
ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீா்வு காணாவிட்டால், நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய வணிகா் சம்மேளனத்தின் (சிஏஐடி) பொதுச்செயலாளா் பிரவீன் கண்டேல்வால் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களிடம் பேசுகையில், ”பிராண்ட் அல்லாத பாக்கெட் செய்து சீலிடப்பட்ட அரிசி, கோதுமை, தயிா், […]
மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற விவகாரம்..! காரைக்காலில் இன்று ஒருநாள் கடையடைப்பு..!

You May Like