fbpx

அத்தை மகன் மாமன் மகள் திருமணம் செய்ய தடை!… புதிய சட்டம் அமல்!

நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தவறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன் மகள் மற்றும் தாயின் சகோதரரின் மகன் மகள் (அதாவது அத்தை மகன் மாமன் மகள்)என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது. இந்த தடையை மீறி திருமணம் செய்து கொள்வோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோா் 18 வயதுக்குள்ளாக இருக்கக் கூடாது. அதில் யாரேனும் ஒருவா் 21 வயதுக்கு உள்பட்டு இருந்தால் அவா்களின் பெற்றோா் அல்லது காப்பாளருக்கு பதிவாளா் தகவல் தெரிவிக்க வேண்டும்.

உத்தரகாட்ண்டில் வசிக்கும், மாநிலத்தைச் சேர்ந்தவரோ அல்லது சேர்ந்தவர் அல்லாதவரும் பதிவாளரிடம் தங்களது உறவு குறித்து தகவல்களை அளித்துப் பதிவு செய்ய வேண்டும். உத்தரகாண்டைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களில் வசித்து, லிவ் – இன் உறவில் இருந்தால் அவர்கள் தங்களது பகுதிக்குள்பட்ட பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறான தகவல்களைச் சமா்ப்பித்து பதிவு செய்யப்பட்டால், அவா்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவை முடிவுக்கு கொண்டு வர அனுமதி அளித்தும் மசோதாவில் விதிகள் இடம்பெற்றுள்ளன. மசோதாவில் லிவ்-இன் உறவில் இருக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுடன், உறவில் தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு தங்கள் துணையிடமிருந்து குழந்தை பராமரிப்புக்கான செலவைப் பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முக்கிய அம்சமாக, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது.

Kokila

Next Post

பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு...! இனி இதை செய்தால் ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யப்படும்...!

Sat Feb 10 , 2024
பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வணிகம் செய்பவர்கள் தாங்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு மாநில அரசுக்கு வரி என்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் ஆனால் வணிகம் நிறுவனங்கள் அந்த தொகையைச் […]

You May Like