Barracuda நிறுவனம் இந்தியா உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இ-மெயில், அப்ளிகேஷன், நெட்வொர்க், டேட்டா உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்த நிறுவனத்தில் அசோசியேட்ஸ் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி ;
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். இதுதவிர சி, சி++, Shell Script, Perl, Python, Git உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆக்டிவ் டைரக்டரி, Kerberos, NTLM, ஸ்ட்ராங்க் பிராக்டிக்கல் லினக்ஸ் ஸ்கீல்ஸ் (Strong practical linux skills) இருக்க வேண்டும். SDLC, Agile Practies, Coding standards, code reviews, source control Management தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர சி, சி++, Perl, Python உள்ளிட்டவற்றில் நெட்வொர்க் அப்ளிகேஷன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஒருவேளை பணி அனுபவம் இல்லாமல் மேற்கூறிய அனைத்து தகுதி கொண்டிருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.
சம்பளம் ;
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் கோரமங்களாவில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்புவோர், https://jobs.jobvite.com/careers/barracuda-networks-inc/job/oPjKtfw5?__jvst=Career%20Site என்ற இணைய தளத்திற்குள் சென்று விண்ணப்பம் செய்யலாம்.