துபாயில் நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூபாய் 20 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளார்.
பேட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் சாம் கரன் ரூ.18 கோடியே 50 லட்சத்துக்கு அதிகப்படியாக விலைக்குச் சென்ற வீரர் ஆவார்.