இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 490 பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 01.05.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
Junior Executive – 490
Architecture – 3
Engineering‐ Civil – 90
Engineering ‐ Electrical – 106
Electronics – 278
Information Technology – 13
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.05.2024 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் என வயதில் சலுகை உண்டு.
தேர்வு முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி..?
https://www.aai.aero/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை பொதுப்பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
கூடுதல் விவரங்கள்:
இந்த பணியிடம் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள https://www.aai.aero/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.