சர்ச்சையான பேட்டிகளை அளித்து பிரபலமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். நடிகர்களை வம்பிழுப்பதே இவருக்கு பெரிய பொழுதுபோக்காக மாறியுள்ளது. அந்த வகையில், மதகஜராஜா படக்குழுவினர் நடத்திய விருந்தில், மதுபோதை பரிமாறப்பட்டதாகவும், நடிகர் விஷால் போதையில், நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. இது குறித்து நடிகர் பயில்வான் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறும் போது, “12 வருடங்களுக்கு பிறகு வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது மதகஜராஜா திரைப்படம். இந்த படத்தின் தமிழகத்தின் விநியோக உரிமையை பெற்ற சுந்தர்.சிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டியது. இதனால் அவர் தனது நண்பர்களுக்கு விருந்து வைத்தார். அந்த விருந்தில், நடிகர்களான விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், நடிகை மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சில நடிகர்கள் நடிகைகளை கட்டி அரவணைப்பதை தவறாக நினைக்க கூடாது. விஷால் நடிகைகளை கட்டி அணைக்கிறார் என்று சொன்னால், அது தவறு. அதை அன்பின் அடிப்படையில் பரிமாறப்பட்ட அரவணைப்பாகத்தான் நாம் பார்க்க வேண்டும். ஒரு சில விஷால் போதையில் இருந்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் விபத்திலிருந்து மீண்டு வந்த விஷால் குடிப்பாரா? அப்படி குடிப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிப்பார்களா? விஷால் குடிக்க வாய்ப்பில்லை.
அதேபோல, மூத்த நடிகை என்ற முறையில், நடிகை மீனாவின் தோள் மீது கை வைத்து அவர் போட்டோ எடுத்தார். மேலும், கேஎஸ் ரவிக்குமாருடன் அவர் பல படங்களில் நடித்ததால் அவர் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். அதேபோல விஷால், இப்போது அடுத்தக்கட்டதுக்கு நகர நினைக்கிறார். அப்படியிருக்கும் போது, திரை நட்சத்திரங்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக சொல்வதெல்லாம் தவறு” என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.