இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் சொந்த மண்ணில் நடைபெறும் சீசனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அணி (சீனியர் ஆண்கள்) சர்வதேச உள்நாட்டு சீசனுக்கான அட்டவணையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. வரவிருக்கும் சீசன், டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் (ODI) மற்றும் இருபது20 சர்வதேச போட்டிகள் (T20I) என மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா மோதுவதால், சிலிர்ப்பூட்டும் சந்திப்புகளை உறுதியளிக்கிறது” என்று குறிப்பிட்டுளளது.
🚨Announcement🚨
— BCCI (@BCCI) April 2, 2025
Fixtures for #TeamIndia (Senior Men) international home season for 2025 announced.
Test series against West Indies, followed by an all-format series against South Africa.
Guwahati to host its maiden Test
Details 🔽https://t.co/s1HyuWSDL2
வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்த சீசன் அக்டோபர் 2ஆம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது.
முதல் டெஸ்ட்: அகமதாபாத் (அக்டோபர் 2)
இரண்டாவது டெஸ்ட்: கொல்கத்தா (அக்டோபர் 10)
தென்னாப்பிரிக்கா தொடர்: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு, இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்:
முதல் டெஸ்ட்: டெல்லி (நவம்பர் 14)
இரண்டாவது டெஸ்ட்: கவுகாத்தி (நவம்பர் 22)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானஒருநாள் தொடர்:
முதல் ODI: ராஞ்சி (நவம்பர் 30)
இரண்டாவது ODI: ராய்ப்பூர் (டிசம்பர் 3)
மூன்றாவது ODI: விசாகப்பட்டினம் (டிசம்பர் 6)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடர்:
முதல் T20: கட்டாக் (டிசம்பர் 9)
இரண்டாவது T20: நியூ சண்டிகர் (டிசம்பர் 11)
மூன்றாவது T20: தர்மசாலா (டிசம்பர் 14)
நான்காவது T20: லக்னோ (டிசம்பர் 17)
ஐந்தாவது T20: அகமதாபாத் (டிசம்பர் 19)
Read More: பொதுத்தேர்வு முடியும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டி கிடையாது..? சட்டப்பேரவையில் ஒலித்த குரல்..!!