இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாடை இழந்த கார் விபத்துக்களானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட்டை உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மும்பை மருத்துவமனையில், ரிஷப் பண்ட்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக பிசிசிஐ நேற்று தெரிவித்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து ரிஷப் பண்ட் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.