fbpx

உஷார்..!! காய்கறி வாங்கச் சென்ற 40 வயது பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்..!! ஓட்டுநரின் கொடூர செயல்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 40 வயதில் ஒரு பெண் பேருந்து ஓட்டுனரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணின் கணவர், பேருந்தில் சென்ற மனைவி திரும்பி வராததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில் வியாழன் நள்ளிரவில் ஒரு பெண் மயக்கமடைந்த நிலையில், காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை காலை பாஜக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரா கைது செய்யப்பட்டார்.

காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றிருந்த சமயத்தில் குற்றவாளிகளால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த மாதம் ராஜஸ்தானின் தீத்வானா குச்சமன் மாவட்டத்தில் 32 வயது தலித் பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் ராஜஸ்தானின் தௌசாவில் 4 வயது சிறுமியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நவம்பர் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திட்டம்..!! அது ஒருபோதும் நடக்காது..!! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!

Mon Nov 20 , 2023
ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திட்டமிட்டு வருகின்றனர், அது ஒருபோதும் நடக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தருமபுரியில் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஏழைப் பெண்களின் திருமணம் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா, தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் […]

You May Like