fbpx

உஷார்..!! கிராம நிர்வாக அலுவலரை ஏமாற்றிய பிரபல வங்கி..!! ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் தருவையைச் சேர்ந்தவர் அரி முத்துக்குமார் (43). இவர், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அரசின் ஊதியமும் இந்த வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு வங்கி இவரது வரவு செலவு சிறப்பாக இருப்பதை கவனித்து இவருக்கு கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்து இவரை நிர்பந்தம் செய்துள்ளது. இவர் வேண்டாம் என்று மறுத்த நிலையில், அதற்கான கட்டணம் ஏதுமில்லை நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே கட்டணம் எனக் கூறி கிரெடிட் கார்டை கொடுத்ததாக தெரிகிறது.

எவ்வித பயன்பாடும் இன்றி கார்டை அப்படியே வைத்துள்ளார் முத்துக்குமார். இந்நிலையில், 2019 அக்டோபர் மாதம் 200 ரூபாய் வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் மாதம் 326 ரூபாய், டிசம்பர் மாதம் 322 ரூபாய் என வங்கிக் கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டை திரும்ப கொடுத்துள்ளார்.

ஆனால், வாடிக்கையாளரை மதிக்காத வங்கி நிர்வாகம் அவரை டெல்லியில் உள்ள கிரெடிட் கார்டு தொடர்பான நோடல் அதிகாரியையும், ஹரியானா மாநிலம் குவாரகானிலுள்ள கார்டு தொடர்பான பொது மேலாளர் ஐயும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அவர்களது தொலைபேசி எண் எண்ணுக்கும் புகார் அளித்துள்ளார். இமெயில் மூலமாகவும் தனது புகாரை தெரிவித்திருக்கிறார். ஆனால், கடந்த 2022 வரை மாதம் தோறும் பணம் பிடித்தம் செய்யப்பட்டு 17,742 ரூபாய்
வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி க்ளாட்சன் பிளஸ்டு தாகூர் வங்கி சேவை குறைபாடு செய்துள்ளது என தீர்ப்பளித்தார். மேலும் நஷ்ட ஈடாக வங்கி சார்பில் பத்தாயிரம் ரூபாயும், நோடல் அதிகாரியும் கார்டுகளை கவனிக்கும் பொது மேலாளரும் இணைந்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவிற்கு நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும் மொத்தமாக 24 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அதோடு கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட 17,742 ரூபாயையும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Chella

Next Post

நீங்களாம் அரசியலுக்கு வந்து என்னத்த கிழிக்கப் போறீங்க..? விஜய்யை வெளுத்து வாங்கிய காடுவெட்டி குரு மகள்..!!

Fri Oct 6 , 2023
பெண்களை இழிவாக பேசி அல்லு சில்லு நடிகர்களைப் போல் மட்டமான, கேவலமான செயல் செய்யும் நீங்கள், அரசியலுக்கு வந்து என்ன கிழிக்கப் போறீங்க? என்று நடிகர் விஜய்க்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் விஜய் ஆயிரம் காரணம் கூறினாலும் அவர் பேசியவார்த்தையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி […]

You May Like