fbpx

உஷார்..!! மீனை சமைத்து சாப்பிடும்போது கவனமா இருங்க..!! கை, கால்கள் அகற்றம்..!! உயிருக்கு போராடும் பெண்..!!

ஆசையாக மீன் சாப்பிட்ட பெண் இரண்டு கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த லாரா பராஜஸ் (40) என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் லாராவுக்கு அறுவை சிகிச்சை மூலம் கை, கால்கள் அகற்றப்பட்டுள்ளன. மூச்சு விடமுடியாமல் தவிக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் உடல்நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற கேள்விக்கு சாதாரண மீன் தான் காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய லாராவின் தோ மெசினா, “லாரா தனது வீட்டின் அருகில் இருக்கும் சான் ஜோஸ் பகுதியில் இருக்கும் மார்க்கெட்டிற்கு சென்று திலேபி மீனை வாங்கி வந்துள்ளார். அதை அவரே சமைத்தும் சாப்பிட்டுள்ளார். பின்னர் லாராவின் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அவரது கை விரல்கள், கால்கள், கீழ் உதடுகள் கருப்பு நிறமாக மாறியது. சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளன. கோமாவுக்கு சென்ற லாரா கிட்டத்தட்ட மரணமடைந்த நிலையில் இருக்கிறார். யாருக்கும் இது போன்ற கொடுமை நடக்க கூடாது” என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், அவரது உடலில் விப்ரியோ வல்னிஃபிகஸ் (Vibrio vulnificus) என்ற பாக்டீரியாவின் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் லாராவின் உடல் செயலிழந்து விட்டதாகவும், உயிர் வாழ்வதற்காக அவரது கை, கால்களை அகற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் சாப்பிட்ட திலேபியா மீனில், விப்ரியோ வல்னிஃபிகஸ் பாக்டீரியா இருந்துள்ளது. மீனை சரியாக சமைத்து சாப்பிடாததால், லாராவின் உடலில் பாக்டீரியாவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடலில் வாழும் எண்ணற்ற விஷத்தன்மையுள்ள உயிர்களில் விப்ரியோ வனிஃபிகஸ் பாக்டீரியாவும் ஒன்று. இந்த பாக்டீரியா கடல் உயிரினங்களில் வாழக்கூடியது. அதை மனிதர்கள் சாப்பிடும் போது அவர்களின் உடலிலும் தஞ்சம் அடையக்கூடியது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதால் உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

கொடிய விஷமுள்ள இந்த பாக்டீரியாவில் அமெரிக்காவில் ஆண்டு தோறும் 80,000 பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பாக்டீரியாவின் பாதிப்பால் வயிற்று வலி, பேதி, வாந்தி, உடல் வலி, உடலில் சிகப்பு தன்மை ஏற்படும் என கூறப்படுகிறது. இப்படி ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா மெக்சிகோவில் கடல்பகுதிகளில் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

திடீரென்று தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுமி....! காரணத்தைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்...!

Sun Sep 24 , 2023
தர்மபுரி அருகே பெற்றோர்கள் வீட்டு வேலை செய்ய சொன்னதால், வீட்டு வேலைக்கு பயந்து, 14 வயது சிறுமி தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற ஏரியூர் பகுதியில் வசித்து வரும், சுப்ரமணி என்பவரின் 14 வயதான மகள் சசிகலா அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சிறுமி என்பதால், அடிக்கடி அவருக்கு பெற்றோர்கள் […]

You May Like