fbpx

உஷார்..!! காலாவதியான சாக்லேட்..!! ரத்த வாந்தி எடுத்து ஒன்றரை வயது குழந்தை பலி..!! அச்சத்தில் மக்கள்..!!

மளிகைக் கடையில் காலாவதியான சாக்லேட்டை வாங்கி சாப்பிட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை ரத்த வாந்தி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, தனது பெற்றோருடன் பாட்டியாலாவுக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு உறவினர் விக்கி கெஹ்லாட், உள்ளூர் மளிகைக் கடையில் குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். அதை வாங்கி சாப்பிட்ட குழந்தை, சிறிது நேரத்திலேயே ரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும், குழந்தை உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிதாபமாக குழந்தை இறந்தது. மருத்துவப் பரிசோதனையில் குழந்தை விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, குழந்தையின் குடும்பத்தினர் காவல்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தனர். சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு விரைந்து, சோதனை செய்தனர். அப்போது, அந்த கடையில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடையில் இருந்து காலாவதியான மற்ற தின்பண்டங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த மாதம், பாட்டியாலாவில் 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் கேக் சாப்பிட்டதால் ஃபுட் பாய்சனாகி உயிரிழந்தார். சிறுமி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். மாநில சுகாதாரத் துறையிடம் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். பின்னர், கேக் ஆர்டர் செய்யப்பட்ட பேக்கரி பதிவு செய்யப்படாமல், போலி பெயரில் இயங்கி வந்தது தெரியவந்தது. ஆர்டர் செய்த கேக் காலாவதியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : ராகுல் காந்தி நேருவின் பேரன் தானா..? திடீரென கிளம்பிய சந்தேகம்..!! டிஎன்ஏ பரிசோதனை பண்ணுங்க..!!

Chella

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சென்னை விமான நிலையத்தில் வேலை..!!

Wed Apr 24 , 2024
சென்னை விமான நிலையத்தில் காலியாகவுள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி தகுதி: Utility Agent – Ramp Driver – பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுபோக கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். Handyman/ Handywoman […]

You May Like