fbpx

உஷார்..!! வெங்காயத்தால் இப்படி ஒரு பாதிப்பா..? 100 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பாக்டீரியா தொற்றிய வெங்காயத்தை உண்பதால் உண்டாகும் புதுவித பாதிப்புகள் பல்வேறு மாகாணங்களிலும் பரவியதை அடுத்து, அந்த மாகாணங்களில் அமெரிக்கா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சால்மோனெல்லா பாக்டீரியா ஒளிந்திருக்கும் வெங்காயத்தை உண்பதால், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்பு வரையிலான பாதிப்புகள் வரக்கூடும் என தெரியவந்துள்ளது. அமெரிக்க மாகாணங்களில் இந்த பாக்டீரியா தொற்றுள்ள வெங்காயத்தை உண்டதால் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலிகள் ஏதும் இல்லாதபோதும், மக்கள் மத்தியில் பாக்டீரிய தொற்றிய வெங்காயம் தொடர்பாக அச்சம் எழுந்துள்ளது.

கில்ஸ் ஆனியன்ஸ் என்ற நிறுவனம் வெங்காய ரகங்களை நறுக்கியும், அவற்றை செலரி மற்றும் கேரட்டுடன் கலவையாகவும் பேக் செய்தும் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. சால்மோனெல்லா எச்சரிக்கையை அடுத்து, தனது வெங்காய பாக்கெட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக கில்ஸ் ஆனியன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி, நறுக்கி விற்பனைக்கு வரும் வெங்காயத்தில் சால்மோனெல்லா பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உணவை சுமார் 150 பாரன்ஹீட் வெப்பத்தில் சூடாக்கும்போது சால்மோனெல்லா பாக்டீரியா செயலிழந்துவிடும். அவ்வாறு முழுவதுமாக சமைக்காத மற்றும் முறையாக வேகாத வெங்காயத்தால் பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

கில்ஸ் ஆனியன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை திரும்பப்பெறுவதுடன், அமெரிக்கர்கள் தங்களது ஃபிரிட்ஜ் சேமிப்பில் இருக்கும் வெங்காயத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

கத்தார் நீதிமன்றம் தீர்ப்புக்கு காரணம் என்ன…? இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!…

Fri Oct 27 , 2023
நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்தாரில் உள்ள அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான கேப்டன்கள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் சுகுநாகர் பகாலா, சஞ்சீவ் குப்தா, அமித் நக்பால், […]

You May Like