fbpx

உஷார்..!! இளம்பெண்களை கடத்தி விற்பனை..!! தமிழ்நாட்டிலுமா..? விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 55 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இம்மாத தொடக்கத்தில் சோதனை நடத்தியது. இதில், 4 ஆட்கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய 44 பேர் பிடிபட்டனர். அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. சட்டவிரோத ஆட்கடத்தல் நெட்வொர்க்கானது தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவியிருந்ததும் அந்த பகுதிகளில் இருந்து செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.

விசாரணையில், காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் ரோகிங்கியா பெண்களை கடத்தி வந்து, பணத்திற்காக விற்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி பந்திப்போரா மாவட்டத்தின் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு லக்சயா சர்மா கூறுகையில், வங்காளதேசத்தில் இருந்து ரோகிங்கியா பெண்களை கடத்தி வந்து இந்தியாவின் வடகாஷ்மீரில் விற்பனை செய்கின்றனர்.

பின்னர், பணம் பெற்று கொண்டு அவர்களை உள்ளூரில் உள்ளவர்களிடம் விற்றுள்ளனர். அவர்களை வாங்கிய நபர்களுடன் அந்த பெண்களுக்கு திருமணமும் நடந்துள்ளது. இந்த ஆட் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் ரோகிங்கியாவை சேர்ந்த மன்சூர் ஆலம் என்பவரும் ஒருவர். கைது செய்யப்பட்ட அந்நபர், பணத்திற்காக ரோகிங்கியா பெண்களை கடத்தி, காஷ்மீரில் விற்றுள்ளார்.

இந்த சட்டவிரோத செயல் மொத்தத்திற்கும் பின்புலத்தில் இருந்து முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் ஆலம் என அவர் கூறினார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், ரோகிங்கியா பெண்கள் 2 பேர், உள்ளூர் வாசிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 2 வகையில் குற்றங்கள் நடந்துள்ளன. முதலில் அகதி முகாம்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து, சட்டவிரோத வகையில் இந்தியாவுக்குள் ஊடுருவ செய்துள்ளனர். இரண்டாவதாக மணப்பெண்களாக அவர்கள் விற்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Chella

Next Post

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!! வெளுத்து வாங்கப்போகுது..!!

Wed Nov 29 , 2023
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (28-11-2023) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

You May Like