சமூக வலைதளத்தில் எந்த அளவுக்கு நன்மை இருகிறதோ, கவனமாக இல்லையென்றால் அதே அளவுக்கு தீங்கும் இருக்கிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் நிகழ்வே காரணம்.
அந்தவகையில், நெல்லை சுற்றுவட்டார பெண்களை குறிவைத்து இஸ்டாவில் மயக்கி வாழ்க்கையை சீரழித்த சுந்தரம் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தன்னை பணக்காரனாக காட்டிக் கொள்ளும் சுந்தரம், இன்ஸ்டாவில் அறிமுகமாகும் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.