fbpx

பெண்களே உஷார்..!! பியூட்டி பார்லர், டெய்லர் கடைக்கு குறிவைக்கும் மர்ம கும்பல்..!! என்ன செய்வார்கள் தெரியுமா..?

தொழில்நுட்பம் பெருக பெருக, நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பெண்களின் செல்போன் நம்பர் விற்பனைக்கு என்று புது மோசடி ஒன்று ஆன்லைனில் அரங்கேறி வருகிறது. பிரபல நடிகைகளின் முகத்தை மார்பிங் செய்வது, லிங்க்குகளை அனுப்ப சொல்லி, அப்பாவி மக்களின் பணத்தை அபேஸ் செய்வது, என மோசடிகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலும் சிக்கிவிடுவது பெண்களாகவே உள்ளனர்.

அந்தவகையில், பெண்களை பாதிக்கும் நூதன முறை சைபர் கிரைம் ஒன்று தற்போது நடந்துள்ளது. பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் பணமோசடி நடக்கிறதாம். இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் குவிந்தபடி உள்ளது. இதுக்காகவே, தனியாக டெலிகிராம் குரூப்களும் செயல்பட்டு வருகிறதாம்.

அதாவது, சம்பந்தப்பட்ட வெப்சைட்களில் நுழைந்ததுமே, ஒரு மெசேஜ் வருகிறதாம். அதில், பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது. வயது வாரியாக பல பெண்களின் செல்போன் நம்பர்கள் உள்ளன. கூகுள்பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால், அந்த பெண்கின் செல்போன் நம்பர்கள் அனுப்பப்படும் என்று மர்ம நபர்கள் மெசேஜ்கள் அனுப்புகிறார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், ரூ.200 முதல் ரூ.500 வரை செல்போன் நம்பர்கள் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது.

வயதிற்கு ஏற்றார்போல், பெண்களின் போட்டோக்களுடன், பெண்களின் செல்போன் நம்பர் விலை வைத்து விற்கப்படுவது தெரியவந்துள்ளது. முக்கியமாக, பெண்கள் உங்களுடன் பேச ஆசைப்படுகிறார்கள் என்று சொல்லி வலையை விரிக்கிறதாம் அந்த கும்பல். இந்த விளம்பரத்தை பார்த்ததுமே சில ஆண்கள் விழுந்துள்ளனர். உடனே வீடியோ கால், ஆடியோ கால் மூலமாக பேச முற்பட்டுள்ளனர். அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்களை விற்பதும், அவர்கள் பேசாவிட்டால் வேறு எண்கள் தருகிறோம் இல்லாவிட்டால், அந்த பெண்களை பேச வைப்பதாக புரோக்கர் வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது.

அப்படி பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நம்பர், விற்பனை செய்யப்பட்ட பிறகு சில மணி நேரம் பேசுகிறார்களாம். அடுத்த சிறிது நேரத்திலேயே ஸ்விட்ச் ஆப் ஆகி விடுகிறதாம். மீண்டும் சோஷியல் மீடியா மூலம் பெண்களின் எண்களை வாங்குவதற்கு ஆண்களை தேட துவங்குகிறதாம் இந்த மர்ம கும்பல். இந்த மோசடியில் சுய தொழில் மேற்கொள்ளும் பல பெண்கள் பாதிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

உதாரணமாக, டெய்லர் கடை, பியூட்டி பார்லர், போன்றவற்றை பெண்கள் மட்டுமே நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களது கடைகளுக்கு விளம்பரம் செய்ய நேரிடும்போது, அதில் தங்கள் கடையின் போன் நம்பரையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இப்படி இந்த விளம்பரத்திற்காக எழுதப்படும் செல்போன் நம்பரையும், அந்த மர்ம கும்பல் திருடி ஆன்லைனில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த பெண்களிடம் வாடிக்கையாளர் போல அறிமுகமாகி, நட்பாக்கி கொண்டு, பிறகு அவர்களையும் தங்கள் ஆசை வலையில் விழ வைத்து, விபச்சாரத்தில் தள்ளிவிடுகிறார்களாம். எனவே, இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! சாகித்ய அகாடமி விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி காலமானார்..!!

Wed Jan 17 , 2024
சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாள பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. பிரபல மலையாள எழுத்தாளரான கே.பி.ஸ்ரீதேவி, நம்பூதிரி பெண்களின் வாழ்க்கையை நாவல்களாக வடித்தவர். தனித்துவமிக்க அவரது எழுத்துக்கள் அவருக்கென்று மலையாளத்தில் நிரந்தரமான இடத்தை பெற்றுக் கொடுத்தது. ‘யக்ஞம்’, ‘பறைபெட்ட பந்திருகுளம்’, ‘அக்னிஹோத்திரம்’ போன்ற பிரபல படைப்புகளை அவர் எழுதியிருக்கிறார். மிக இளம்வயதிலேயே எழுதத் தொடங்கிய ஸ்ரீதேவி, நாவல் மட்டுமின்றி சிறுகதைகள், சிறுவர் […]

You May Like