fbpx

பெண்களே உஷார்..!! லிப்டில் தனியாக இருந்த பெண்ணின் முன்பு இளைஞர் செய்த காரியம்..!! பரபரப்பு சம்பவம்..!!

டெல்லியில் உள்ள ஜசோலா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 26 வயதான ராஜேஷ் குமார் என்ற நபர் ஏப்ரல் 4ஆம் தேதி வந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில், ஹவுஸ்கீப்பிங் பணியாளராக இருப்பவர். இவர் அன்றைய தினம் ரயில்நிலையத்தில் உள்ள லிப்ட் ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது, ஆர்க்கிடெக்ட் பணியில் இருக்கும் பெண் ஒருவரும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து அதே லிப்டில் பயணித்துள்ளார். அப்போது, லிப்டில் இருவர் மட்டுமே தனியாக இருந்த நிலையில், அந்த நேரம் பார்த்து ராஜேஷ் குமார் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.

தனியாக இருந்த அந்த பெண்ணின் முன் தனது அந்தரங்க உறுப்புகளை காட்டியும் சீண்டியும் தொல்லை கொடுத்துள்ளார் ராஜேஷ். இதனால், பதறிப்போன அந்த பெண் கூச்சலிடவே, லிப்ட் மேல் தளத்திற்கு வந்துள்ளது. லிப்ட் கதவு திறந்ததும் ராஜேஷ் அங்கிருந்த தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனால், பாதிப்புக்கு ஆளான பெண் உடனடியாக அங்கிருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அடையாளம் கண்டுகொண்ட போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல்... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..

Sat Apr 15 , 2023
சீனா சென்ற சரக்கு விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று சீனாவின் குவாங்சோ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.. ஆனால் நடுவானில் விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. வங்காள விரிகுடாவுக்கு மேலே, விமானம் பறந்து கொண்டிருந்த போது இந்த […]

You May Like