பள்ளி வேனிலேயே பத்தாம் வகுப்பு மாணவி, ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பன்வெல், உசார்லி விலேஜ் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு குமார். இவருக்கு வயது 40. இவர், பள்ளி மாணவர்களுக்கு வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் ரிங்கு குமார், மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு பேருந்தில் வீட்டிற்கு சென்றார். ஒவ்வொரு இடமாக அனைத்து மாணவர்களையும் வீட்டில் இறக்கிவிட்ட பின் கடைசியாக பத்தாம் படிக்கும் 14 வயது மாணவி மட்டுமே வேனில் தனியாக பயணித்துள்ளார்.
இதனை சாதகமாக்கிக் கொண்ட டிரைவர் ரிங்கு குமார், திடீரென பேருந்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி, அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பேருந்துக்குள்ளேயே வைத்து மாணவியை ஆடைகளை கழற்றி, ரிங்கு குமார் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து, அழுது கொண்டே வீட்டிற்கு தாமதமாக வந்த மாணவியிடம், தாய் விசாரித்துள்ளார். அப்போதுதான் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வேன் ஓட்டுநர் ரிங்கு குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.