தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). இவர், பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறுவர், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு கடந்த 2023ஆம் ஆண்டில் தகவல் வந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், விக்டர் ஜேம்ஸ் ராஜா 18 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததும், அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையதளத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜ், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் விற்பனை செய்த ஜேம்ஸ் விக்டர் ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6.54 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளி வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட 1 சிறுவர், 2 சிறுமி என மூன்று பேருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.
Read More : கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புதிய வீடு..!! இவ்வளவு பிரம்மாண்டமா..? வைரலாகும் வீடியோ..!!