செறிவூட்டப்பட்ட வாட்ஸ்அப் செயலி என புதிதாக பரவி வரும் வாட்ஸ் அப் லிங்க் செயலி மூலமாக வாட்ஸ் அப் பயனர்யர்களின் தகவல் திருடு போய் வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சைபர் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாள்தோறும் புதுவிதமான மோசடிகளும் நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில், இந்த பிங்க் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்தால் ஒரிஜினல் whatsapp செயலியின் பேக்ரவுண்ட் பிங்க் நிறத்தில் மாறிவிடுகிறது. உடனடியாக உங்களுடைய ஓடிபி தொடர்பான எண்கள், புகைப்படங்கள் மற்றும் வங்கி விபரங்கள் உள்ளிட்டவை திருடு போய்விடும் என்ற சைபர் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது