fbpx

’போருக்கு தயாராக இருங்கள்’..!! வீரர்களுக்கு உத்தரவிட்ட அமெரிக்கா..!! ஆரம்பமாகிறதா 3ஆம் உலகப்போர்..?

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் களமிறங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று 2,000 வீரர்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பதிலடி கொடுப்பதற்கு தயாராக இருக்குமாறு 2,000 அமெரிக்க வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பிடனின் உத்தரவின் பெயரில் இந்த உத்தரவு சென்றுள்ளது. போர் உச்சம் அடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதனால் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன் காரணமாக, இஸ்ரேலுக்கு கூடுதல் மருத்துவ உதவி அல்லது வெடிகுண்டு உதவி, ஆயுத உதவி போன்ற பல்வேறு உதவிகளை அமெரிக்க படை வீரர்கள் வழங்குவார்கள். நேரடி பாதுகாப்பு, தாக்குதல் பணிகள், பல்வேறு இடங்களை பிடிப்பது உள்ளிட்ட பணிகளிலும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும். இஸ்ரேலுக்கு மட்டுமின்றி காசா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட இவர்கள் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அங்கே படைகளை குவித்து இஸ்ரேலுக்கு போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் வகையில் அமெரிக்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை போரில் அமெரிக்கா கப்பலை அனுப்பி இருந்தாலும் நேரடியாக எந்த ஆக்சனும் எடுக்கவில்லை. உதாரணமாக அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு போர் கப்பல் மத்திய கிழக்கில் கால் பதித்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவ உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலும் சிறந்த அமெரிக்க போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதனால் போர் தற்போது அமெரிக்கா vs பாலஸ்தீனம், ஈரான் உட்பட இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுக்கும் என்கிறார்கள். அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (சிவிஎன்-78), டிகோண்டெரோகா ஏவுகணை கப்பல் யுஎஸ்எஸ் நார்மண்டி (சிஜி 60), அத்துடன் ஆர்லீ-பர்க் கிளாஸ் ஏவுகணை, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர் (டிடிஜி 116), யுஎஸ்எஸ் ராமேஜ் (டிடிஜி 61), யுஎஸ்எஸ் கார்னி (டிடிஜி 64), மற்றும் யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் (டிடிஜி 80) ஆகிய போர் கப்பல்கள், போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு; யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு அமெரிக்காவின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலாக கருதப்படுகிறது. ஏறத்தாழ 1,092 அடி (333 மீட்டர்) நீளமும், அதன் விமான தளத்தில் 256 அடி (78 மீட்டர்) அகலமும் மற்றும் 250 அடி (76 மீட்டர்) உயரமும் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பலாகும்.

இதில் 3,000 வீரர்கள் குறைந்த பட்சம் இருக்க முடியும். 10 ஆயிரம் வீரர்களை கூட கொண்டு செல்ல முடியும். 25 போர் விமானங்களை கொண்டு செல்ல முடியும். இந்த கப்பல் மத்திய கிழக்கிற்கு சென்றாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது படைகளை களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி உள்ளதால் போர் உண்மையில் உலகப்போராக மாற உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Chella

Next Post

பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும்..? சர்ச்சையை கிளப்பிய ஹெச்.ராஜா..!!

Tue Oct 17 , 2023
ஜெய் ஸ்ரீராம் கோஷம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த கோஷம் ஒன்றும் ஆட்சேபகரமானது அல்ல என்றும், பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும் என ஹெச்.ராஜா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் […]

You May Like