fbpx

ரெடியா இருங்க!… அடுத்த 2ஜி ஆடியோ வெளியிடவுள்ளேன்!… இதை மறுத்தால் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்!… Annamalai பேச்சு!

Annamalai: 2 ஜி தொடர்பான ஆடியோவை விரைவில் வெளியிடப் போகிறேன். அதை மட்டும் ஆ. ராசா மறுத்துவிட்டால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்க்கட்சியினர் மீது அனல் கக்கி வருகின்றனர். அந்த வகையில், திமுக மீதான விமர்சனத்தையும், குற்றச்சாட்டையும் பாஜக மழையாக பொழிந்து வருகிறது. குறிப்பாக, மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவின் ஒவ்வொரு நகர்வையும் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், கனிமொழி மீதும், ஆ. ராசா மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கனிமொழியை ஓசியில் வாழ்பவர் என்றும், உழைத்து வாழாதவர் எனவும் விமர்சித்தார். மேலும், அவரது அப்பாவின் (கருணாநிதி) பெயரை எடுத்துவிட்டால் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், ஆ. ராசா குறித்தும் அவர் விமர்சனத்தை முன்வைத்தார். நான் ஆ. ராசா குறித்த 2ஜி ஆடியோ ஒன்றை வெளியிடப் போகிறேன். அந்த ஆடியோவை அவர் மறுத்தால் அரசியலில் இருந்து இந்த நிமிஷமே நான் போய் விடுகிறேன் என அண்ணாமலை கூறினார்.

Readmore: தேர்தல் பணப்பட்டுவாடா!… C-Vigil செயலி அறிமுகம்!… வேட்பாளர்களின் அத்துமீறல்களை வீடியோ மூலம் புகார் அளிக்கலாம்!… தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!

Kokila

Next Post

இப்போ கொங்கு மண்டலம் மாறிவிட்டது!… நிச்சயம் பாஜக தான்!... திமுக சும்மா பழைய காலத்து பேச்சை பேசிட்டு இருக்காங்க!... Annamalai!

Sat Mar 9 , 2024
Annamalai: கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பாக திமுக அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. திமுகவின் அயலக அணியில் […]

You May Like