நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது உங்களுக்கு எந்த பெர்த் கிடைக்கிறதோ அந்த பெர்த்துக்கு ஏற்றபடி உங்களுக்கான விதிகள் மாறுபடும். இது தொடர்பாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன. உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் உள்ளன. இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன்பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். உங்களின் வயதுக்கு ஏற்ப இருக்கைகள் ஒதுக்கப்படும். இந்த பெர்த் அனைத்திற்கும் ஒரே விதிகள் கிடையாது. விதிகள் அனைத்திற்கும் தனி தனி. அதாவது நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது உங்களுக்கு எந்த பெர்த் கிடைக்கிறதோ அந்த பெர்த்துக்கு ஏற்றபடி உங்களுக்கான விதிகள் மாறுபடும். இது தொடர்பாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
என்ன விதிகள்..?
சைடு அப்பர் – நீங்கள் சைடு அப்பரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். அங்கே உங்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது. உங்களுக்கு மேல் உள்ள விளக்கை 10 மணிக்கு மேல் இரவில் ஏறிய விட கூடாது. நீங்கள் பகல் நேரத்தில் சைடு லோயரில் இருக்க விரும்பினால் இருக்கலாம். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் சைடு லோயரில் நீங்கள் அமர கூடாது. சைடு லோயர் – நீங்கள் சைடு லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். ஆனால், சைடு அப்பரில் உள்ளவர் கீழ அமர விரும்பினால் அவருக்கு பகல் நேரத்தில் மட்டும் இடம் கொடுக்க வேண்டும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் சைடு அப்பரில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.
நீங்கள் லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களுடன் அமர இடம் கொடுக்க வேண்டும். மிடில் சீட்டை தூக்காமல், அவரை உங்களுடன் அமர வைக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் பகலிலும் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.
நீங்கள் மிடலில் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. இரவு 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் சீட்டில் இருப்பவருடன் அமர வேண்டும். மிடில் சீட்டை தூக்கி லோயர் சீட்டில் இருப்பவர்களுக்கு உட்கார முடியாமல் இடையூறு கொடுக்க முடியாது. ஒருவேளை லோயர் சீட்டில் இருப்பவர் உங்களை தூங்க அனுமதித்தால் மட்டுமே நீங்கள் பகலிலும் மிடியில் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு சென்று தூங்க முடியும்.
அப்பரில் இருப்பவர் யாருடனும் இருக்கையை பகிர வேண்டியது இல்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். இந்த விதிகளை சக பயணிகள் மதிக்கவில்லை என்றால் நீங்கள் ஆர்டிஓவிடம் புகார் அளிக்கலாம்.