உலகம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் தங்களது வேலையை இழந்தனர். அதன் பிறகு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால், மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதே சமயம் இன்ஃப்ளுயன்சா வைரஸும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலி, கடுமையான காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.