இந்திய மொழி படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வளம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ள பூஜாவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹிந்தியில் சல்மான் கானின் “கிசி கா பாய், கிசி கா ஜான்”. இந்த படம் தோல்வியை தழுவினாலும், இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் ஹிந்திப்பட உலகில் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமண நடைபெறவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திருமணத்தின் காரணமாகவே பூஜா, படவாய்ப்புகளை புறக்கணித்து திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவருக்கு யாருடன் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தேடுதலை இணையத்தில் அதிகமாகி இருக்கின்றது. சினிமாவில் இருந்து சிறிய பிரேக்கில் இருக்கும் பூஜா மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்தான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வராத நிலையில், பூஜா இதற்கு விளக்கம் கொடுப்பாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே நடிகர் சல்மான் கானை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறப்பட்டது ஆனால் கடைசியில் அது வதந்தி என்று முற்று புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.