நத்தையின் உடலில் இருக்கும் உமிழ் நீர் அல்லது ஜெல் போன்ற திரவம் சரும பராமரிப்பில் பலவித நன்மைகள் அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் மக்கள் அனைவரும் அதிகளவில் கெமிக்கல் கலக்கப்பட்ட ஃபேஸ் க்ரீம், பவுடர்கள், மாஸ்ட்ரைசர்கள் உள்ளிட்ட பலவகையான அழகுச்சாதனப் பொருட்களை பயன்படுத்திவருகின்றனர். இது சிலருக்கு நன்மை அளித்தாலும், சிலருக்கு எவ்வித பலனும் அளிப்பதில்லை. இதனால், வெவ்வேறு அழகு சாதனப் பொருட்களை நாடி செல்கின்றனர். அந்தவகையில், உலகம் முழுவதும் கொரிய அழகு சாதன பொருட்கள் பிரபலமாக உள்ளது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல் உள்ளது என்று அனைவரும் நினைப்பீர்கள்?. இந்த அழகு சாதனப் பொருட்களில் நத்தையின் உமிழ்நீர் பயன்படுத்துவதே இதற்கு காரணம். நத்தையின் உடலில் இருக்கும் உமிழ் நீர் அல்லது ஜெல் போன்ற திரவம் சரும பராமரிப்பில் பலவித நன்மைகள் அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், மிக மிக மெதுவாக செல்லும் உயிரினங்களில் ஒன்றாக இருக்கும் நத்தை, இயங்குவதற்கும், எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதில் சுரக்கும் திரவத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை ஆகிய அற்புதமான பண்புகளை கொண்டுள்ளது. அதன்படி, நத்தையின் சளி போன்ற திரவம் காயத்தை ஆற்றும் தன்மை கொண்டது. அதுமட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வேட்டப்பட்ட இடத்தை ஒட்டுவதற்கான பசையாகவும் செயல்படுகிறது, மேலும் கேஸ்ட்ரிக் அல்சர்களுக்கான தீர்வாகும் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சரும பராமரிப்பு தயாரிப்புகளில் நத்தை உமிழ்நீர் பயன்படுத்தப்படுவதால், ருமத்தை மென்மையாக்கி, வயதாகும் அறிகுறிகளை நீக்கி, ஈரப்பதத்தைத் தக்கவைத்து பொலிவாக்குகிறது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மாலிக்குலர் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வின் படி, நத்தையின் சளியில் கிளைக்கோலிக் ஆசிட், எலாஸ்டின் கொலாஜன், வைட்டமின்கள், சருமத்தை இளமையாக வைத்திருக்கும் மியூசின் போன்ற கிளைகோ புரோட்டீன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல விதமான காம்பவுண்டுகள் உள்ளன. இவை அனைத்துமே சருமத்திற்கு சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு அளிப்பதும் இறந்த செல்களை நீக்குவது, இளமையை தக்க வைப்பது, செல்கள் மறுஉற்பத்தியாக உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.