கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் 21 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த மசாஜ் சென்டரின் பெண் உரிமையாளருக்கும், ரவீந்திர ஷெட்டி (42) என்பவருக்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, மசாஜ் சென்டருக்கு ரவீந்திர ஷெட்டி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்படி சம்பவத்தன்று மசாஜ் சென்டருக்கு ரவீந்திர ஷெட்டி வரும்போது, அந்த பெண் உரிமையாளர் இல்லை. அந்த 21 வயது இளம்பெண் மட்டுமே தனியாக இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரவீந்திர ஷெட்டி இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் நடந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனாலும், ஒரு கட்டத்தில் இளம்பெண் மனஉளைச்சலில் இருந்தை அறிந்த குடும்பத்தினர், காரணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையை தனது குடும்பத்தினரிடம் அவர் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஜெயநகர் காவல் நிலையத்தில் ரவீந்திர ஷெட்டி மீது புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து, ரவீந்திர ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.