fbpx

காயம் இல்லை என்பதால் பாலியல் கொடுமை நடக்கவில்லை என்று கருத முடியாது!… டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாததால் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை என்று கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு நான்கரை வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு நீதிபதி அமித் பன்சால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்கத்தில் காயங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாததால் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை என்று கருத முடியாது என்று கூறி குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களுக்காக போக்சோவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Kokila

Next Post

சென்னையில் இன்று 9 மணிமுதல் மின்தடை!… எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Wed Aug 16 , 2023
பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் […]

You May Like