fbpx

மாநகராட்சியில் தூய்மை பணியாளர் என்பதால் பரிதவிக்கும் அவலம்..!!!

மாநகராட்சியில் தூய்மை பணியாளர் என்பதாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் குடும்பம் என்பதாலும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம் இரண்டு மாத காலமாக வீட்டின் உடமைகளை எடுக்க முடியாமல் பரிதவிக்கும் அவலம்.

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் முத்துப்பாண்டியின் குடும்பம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அண்ணா நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். வீட்டு உரிமையாளரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு எழுதியும் வாங்கி இருக்கிறார்கள்.

வாடகை ஒப்பந்தம் மூலம் இரண்டு வருடத்திற்கு குடியிருக்க இருவரும் சேர்ந்து ஒப்புக் கொண்டிருந்த நிலையில் மேற்படி முத்துப்பாண்டி குடும்பம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் என்பதாலும், மதுரை மாநகராட்சியில் தாய் மகன் இருவருமே தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் என்பதாலும் வீட்டின் உரிமையாளர் கணேசன் என்பவர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். மேலும் முத்துப்பாண்டியன் மனைவியை வீட்டை காலி செய்ய வலியுறுத்தி செருப்பால் வீட்டின் உரிமையாளர் அடித்துள்ளார். இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையில் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த காரணத்தினால் முத்துப்பாண்டியன் குடும்பத்தின் வீட்டு உடைமைகள் சமையல் பாத்திரங்கள் துணிமணிகள், மருத்துவர் ரிப்போர்ட், ஸ்கூல் பேக் உள்ளிட்ட அனைத்தும் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக வீட்டை பூட்டி விட்டு தற்பொழுது வீட்டை திறக்க முடியாத என வீட்டின் உரிமையாளர் தொடர்ச்சியாக மறுத்து வருகிறார். மேலும் வீட்டின் உரிமையாளர் கணேஷ் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து இருக்கிறார்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கணேச தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது மேற்படி முத்துப்பாண்டியன் குடும்பத்தினரால் பத்தாயிரம் ரூபாய் வாடகை முறையாக கொடுக்கவில்லை பல மாதங்கள் வாடகை கொடுக்காத காரணத்தினால் வீட்டை விட்டு அவர்களாக வெளியேறி விட்டார்கள் என்றார்

Maha

Next Post

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து ரொக்கமும், தங்கமும், வெள்ளியும் கிடைக்கப் பெற்றது எவ்ளோ தெரியுமா???

Fri Jun 9 , 2023
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 52 லட்சத்து 07 ஆயிரத்து 983 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 223 கிராம், வெள்ளி 2 கிலோ 780 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் […]

You May Like