மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் Senior Engineer பணிக்கு B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
01.05.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC 3 ஆண்டு, SC / ST 5 ஆண்டு மற்றும் PWD 10 ஆண்டுகள் என பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.55,000 வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=final web-advt 20-07-22.pdf
Also Read: பெண்களே… ரயில் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பு இல்லையா…? உடனே இந்த எண்ணுக்கு கால் செய்யவும்…