fbpx

யூரோ 2024 | ருமேனியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அபார வெற்றி!!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

அதன்படி, பெல்ஜியம் ருமேனியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மீண்டும் பாதைக்கு வந்தது. யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் ரோமானியா அணிகள் மோதின. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்லோவேகியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த பெல்ஜியம் அணி இந்த போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

இந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் 73 நொடியில் அடித்த கோல் அந்த அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெல்ஜியம் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. மறுமுனையில், பெல்ஜியம் அடித்த கோலுக்கு பதில் கோல் அடிக்க ரோமானிய வீரர்கள் முனைப்பு காட்டினர். எனினும், இவர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி அதிரடியாக ஆடியது. போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சூழலில் பெல்ஜியம் அணியின் டெ ப்ரூன் மற்றொரு கோல் அடித்தார். இதன் இதன் மூலம் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலையை தொடர்ந்தது. போட்டி முடிவில் ரோமானியா அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாக பெல்ஜியம் அணி 2-0 என வெற்றது.

பெல்ஜியம் பயிற்சியாளர் டொமினிகோ டெடெஸ்கோ கூறுகையில், “நாங்கள் ஆட்டத்தை வென்றோம், மூன்று புள்ளிகளைப் பெறுவது மிகவும் முக்கியமானது. ருமேனியா எங்களுக்கு ஸ்லோவாக்கியாவைக் காட்டிலும் கொஞ்சம் அதிக இடத்தைக் கொடுத்தது, ஆனால் எங்கள் வாய்ப்புகளின் தரம் மற்றும் அளவுடன், நாங்கள் இன்னும் ஆரம்பத்தில் அடித்திருந்தால் நான்கு அல்லது ஐந்து கோல்கள் சாத்தியமாகியிருக்கும்” என்றார்.

ருமேனியா பயிற்சியாளர் எட்வர்ட் இயர்டானெஸ்கு கூறுகையில், “நாங்கள் போட்டிக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை பெற்றுள்ளோம், இப்போது நாம் சிரமத்தை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதைப் பார்ப்போம். எங்களுக்கு ஒற்றுமை மற்றும் ஒற்றுமை தேவை, ஏனெனில் நாங்கள் இன்னும் குழுவில் முதலிடம் வகிக்கிறோம்,” என்றார்.

English Summary

A goal by Youri Tielemans after 73 seconds and a late one for Kevin De Bruyne gave Belgium a 2-0 win over Romania in an incredible, action-packegame on Saturday that set up a final round showdown with all four teams in Group E on three points.

Next Post

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? மீண்டும் அத்துமீறிய இலங்கை!! தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் கைது!!

Sun Jun 23 , 2024
The Sri Lankan Navy has arrested 18 Tamil Nadu fishermen who were fishing between Kachchathivu and Nedunthivu for fishing across the border.

You May Like