fbpx

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!! 45 ஏக்கர்..!! மதிப்பு இத்தனை கோடியா..?

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

தற்போதைய திமுகவின் மக்களவை உறுப்பினராக உள்ள ஆ. ராசா கடந்த 2004 – 2007 வரையிலான காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமான முறையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக லஞ்சமாக பணம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் ஆ.ராசா பினாமி நிறுவனத்தின் பெயரில் ரூ.55 கோடி மதிப்பில் நிலம் வாங்கப்பட்டது என்றும், கோயம்புத்தூரில் உள்ள இந்த 45 ஏக்கர் நிலத்தை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!! 45 ஏக்கர்..!! மதிப்பு இத்தனை கோடியா..?

ஏற்கனவே ஆ. ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015இல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து தலைநகர் டெல்லி, தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. மேலும், இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நெருங்கும் பண்டிகைகள்..!! தமிழகத்தில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு..!! முதல்வர் இன்று அறிவிப்பு..?

Fri Dec 23 , 2022
பண்டிகை காலங்கள் நெருங்குவதால், தமிழகத்தில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா […]
இந்தியாவில் மீண்டும் கொரோனா அலையா..? பாதிப்புகள் எப்படி இருக்கும்..? ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்..!!

You May Like