அன்றாடம் நாம் உணவு உண்ணும் போது சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால் அது வாயு தொல்லை முதல் வயிறு உப்பிசம் வரை பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது யாவும் அறிந்ததே .இந்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் அசால்டாக விடுவது தான் நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது.
அதற்கான சில சிகிச்சை வழிமுறைகளை இங்கே காணலாம்.
வயிற்று அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீயில் சிறிது தேனை கலந்து குடித்து வந்தால் , அதற்கு தீர்வு கிடைக்கும்.
சிறிது சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினை தீர்வடையும்.
நாள் ஒன்றுக்கு ஒரு கப் புதினா தேநீர் குடித்து வந்தால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலனுடன் வைக்கிறது.