தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பினால் அவதியுற்று வருகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஒரு சில தவறான டயட் முறைகளினால் மேலும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் நோய்களோடும் போராடுகின்றனர்.
இவ்வாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடுகளுடன், முறையான உடற்பயிற்சியும், அன்றாட பழக்கவழக்கங்களில் ஒரு சிலவற்றை மாற்றிக்கொள்வதுமே தீர்வாக அமையும். இதன்படி வெற்றிலை உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதை எப்படி உபயோகப்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்
1. உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைய மதிய உணவு சாப்பிட்டதற்கு பின் வெற்றிலை, கிராம்பு, பாக்கு போன்றவற்றை சேர்த்து மென்று வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
2. வெற்றிலை, மிளகு, மஞ்சள் தூள், பூண்டு போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அந்த தண்ணியை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு விரைவாக கரைந்து உடல் எடை குறையும்.
பொதுவாக வெற்றிலையை வயதான பாட்டிமார்கள் செரிமானத்திற்காக அடிக்கடி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வெற்றிலை சாப்பிடுவதால் செரிமானம் மட்டுமின்றி பல நன்மைகளும் உடலில் ஏற்படும். இவ்வாறு உடல் எடை குறைப்பிற்கும், வெற்றிலை பெரும்பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.