fbpx

மண் சட்டியில் சமைத்த உணவுகள் ஏன் சுவையாக உள்ளது தெரியுமா.? இவ்வளவு நன்மைகளா..!

அந்த காலத்தில் மண் சட்டியில் சமைப்பது இந்திய கலாச்சாரத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல வகையான பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவதால் உணவில் சுவைகள் குறைவதோடு, நோய்களும் ஏற்படுகின்றன. மண் சட்டியில் சமைத்த உணவுகள் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக ஃபாஸ்ட் ஃபுட் என்று சொல்லப்படுகிற வேகமான உணவு முறை தான் இன்று பலரது வீடுகளிலும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அதற்கு அப்படியே நேர் எதிராக மண்பானையில் சமைக்கும் போது ஸ்லோ குக் என்று சொல்லப்படுகிற மெதுவான சமையல் முறையில் மூலமே சமைத்து வந்தனர். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அழியாமல் அப்படியே கிடைத்தது.

குறிப்பாக மண் சட்டியில் குறைவான எண்ணெய்யை பயன்படுத்தி சமையல் செய்யலாம். அதிக எண்ணெய் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் அல்கலைன் எனும் வேதிப்பொருள் மண் சட்டியில் சமைக்கும்போது உருவாகிறது. இது காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அல்கலைன் வேதிப்பொருள் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். மண் சட்டியில் சமைக்கும்போது உடலுக்கு தேவையான பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உடலுக்கு எளிதாக கிடைத்து விடுகின்றன. இதனாலையே மண் சட்டியில் சமைப்பது சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருந்து வருகிறது.

Baskar

Next Post

"அட கடவுளே.." துடிக்க துடிக்க மனைவியை 6 துண்டுகளாக வெட்டிக் கொலை.! மனைவியை காணவில்லை என நாடகம் போட்ட கணவன்.!

Thu Jan 18 , 2024
மேற்கு வங்க மாநிலத்தில் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மத்யகிராம் பகுதியைச் சேர்ந்தவர் நூர்தீன் மொண்டல். 55 வயதான இவர் சொத்து தகராறு காரணமாக தனது மனைவியை கொலை செய்து இருக்கிறார். மேலும் தான் செய்த கொலையை […]

You May Like