fbpx

தக்காளி சாறும்…..! கோடை வெயிலும்….!

கோடை காலம் வந்துவிட்டாலே பலருக்கும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆகவே கோடைகால சரும பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தக்காளியின் பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தோல் பராமரிப்புக்கு தேவைப்படும் கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்டவை தக்காளியில் செறிவாக இருக்கிறது. தக்காளியை சாறு பிழிந்து முகத்தில் பூசி வந்தால் கோடை காலத்தில் உண்டாகும் முக சுருக்கங்கள் அகலும்.

தக்காளி சாறுடன் அரை ஸ்பூன் தேன், பப்பாளி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து தோலில் தடவி வந்தால் தோல் பொலிவுடன் காணப்படும். தக்காளி சாறு சரும துளைகளை இறுக்கமாக்கி நல்ல நிறத்தை கொடுக்கிறது

தக்காளியுடன் பால் முல்தானி உள்ளிட்டவற்றை சேர்த்து பிசைந்து தடவினால் இறந்த செல்கள் நீங்கி வெண்மையான முகமாக மாற வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் வறண்ட சருமத்தை பரபரப்பாக்குவதற்கு தக்காளி சாறுடன் வாழைப்பழம் ஆலிவ் ஆயில் உள்ளிட்டவற்றை சேர்த்து தடவலாம். தக்காளி சாறுடன் புதினா இலைகளை சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடம் சென்ற பின்பு கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.

Next Post

இளைஞர்களே இனி வேலைக்கு செல்ல வேண்டாம்..!! வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்..!! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு..!!

Sat Jul 1 , 2023
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தேனி மாவட்டத்தில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம் சுயவேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழக அரசால் ‘வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ அறிவிக்கப்பட்டு, மாவட்டத் தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பின் உச்ச வரம்பு ரூ.15 […]

You May Like