உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு முறை புற்றுநோயுடன் போராடி, இரண்டு முறையும் குணமடைந்த பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது மீண்டும் புதிய உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு செவ்வாய்கிழமை பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்த்ரிலா முன்பு ஒரு கடினமான அறுவை சிகிச்சை மற்றும் பல முறை கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார், அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ நிபுணர்களால் அனைத்து தெளிவுகளும் அளிக்கப்பட்டன. குணமடைந்த பிறகு, ஐந்த்ரிலா மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
இந்த நிலையில் தான் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நடிகையைப் பற்றிய செய்தி வெளியானதிலிருந்து, ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்து வருகின்றனர்.